Saturday, March 2, 2013

விபத்தும் புயலும்!

அன்பு நண்பர்களே! என் நெருங்கிய அன்பர்கள் வட்டத்துக்குள் நடந்த உண்மை நிகழ்வு இது.

அது ஒரு அழகான காலை, அவளும் குடும்பத்தாரும் அமைதியாய்
உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவளது அலைப்பேசி சினுங்கிக் கெடுக்க
கோபத்துடன்,திரையில் அப்பா காலிங்,
"சொல்லுங்கப்பா என்ன மறந்துட்டீங்க?!கடைலேந்து ஆள் அனுப்பி வாங்கிக்கிறீங்களா"பதில் அவள் வாழ்வின் சூறாவளி என்பதை அறியாமல் கேள்விகளை அடுக்கினாள்.

இந்த நம்பருக்கு சொந்தக்காரங்க யாரும்மா?!
எங்கப்பாதான்.நீங்க யாரு?!.உங்ககிட்ட அப்பா போன் எப்படி கிடைச்சிது?
உங்கப்பாக்கு ஆக்சிடன்ட்மா,வீட்ல இருக்கவங்கள உடனே வரசொல்லு!
அமளிதுமளிப்பட விழி நீரோடு அவள் அன்னையும் உறவுகளும் கிளம்பிச்செல்ல உயிருக்கு போராடிய நிலையில் அவள் தந்தை!

இதுதான் அவள் பட்டாம்பூச்சி வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்ட நிகழ்வின் தொடக்கம்!

பாதி முகம் சிதைந்த நிலையில் மூளையில் ரத்தக்கசிவோடு,கால்களிலும் எலும்பு முறிவு,உள் மூக்கும் உடைந்திருந்தது அவருக்கு! மண்டை உடைந்து வழிந்த செங்குருதி காது வழியே வழிய அவர் உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவமனைகள் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தன!

பிறகு நடந்ததை அனுமானிக்க உங்களுக்கு என் உதவி தேவை இல்லை!
அடியோடு ஓய்ந்தது அக்குடும்பத்தின் மகிழ்ச்சி!

இது அவரின் மறுபிழைப்பு!

அதைப்புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை,ஏற்கனவே மூர்க்கமாய் கோபம் கொள்ளும் மனிதர்,யார் சொல்லுக்கும் அடங்காதவர்.
இப்போது மூளையின் அதிர்வு காரணமாய் கொஞ்சம் கூடுதலாய் பாதிப்பு இருக்கிறது!

இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம் தான்,அவள் வெகு வேகமாய் பிரயாணம் மேற்கொள்பவர், அவரின் குடும்பத்தினர் எத்தனையோ முறை தலைக்கவசம்
அணியச்சொல்லி வற்புறுத்தியும் அவர் ஏளனம் செய்தார், இன்றைய அவர் நிலை ..... கண் பார்வை இழப்பு!!!


மக்களே எனதன்பர்களே குடும்பத்தின் முக்கியமான ஆணிவேர் இப்படி சாய்ந்து கிடக்கையில் குடும்பத்தின் நிலையை நினைத்து பாருங்கள்!

தயவுசெய்து உங்கள் உயிர் காக்க தலைக்கவசம் அணிந்து நிதானமாய் பயனியுங்கள்!

அவரும் கவனமிக்கவர் தான், ஆனால் எல்லா நேரமும் ஒன்றே போல் இருப்பதில்லை!!!

நன்றி
மீண்டும் பிதற்றுவேன்!
மீறூ.

4 comments: